“தமன்னாவை ஒரு பாடலிலாவது ஆட வைத்திருக்கலாம்!” – நெல்சனிடம் சிபாரிசு செய்த ரஜினிகாந்த்!
#Cinema
#LANKA4
#rajini kanth
#Movie
#Song
Riya
1 day ago
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிகை தமன்னா இடம்பெறாதது குறித்து நடிகர் ரஜினிகாந்த் சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘ஜெயிலர் 2’ திரைப்பட நிகழ்வில் பேசிய அவர், படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சூரஜ் உள்ளிட்டோர் சிறப்பாக நடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், படத்தில் தமன்னா மட்டும் இடம்பெறவில்லை என்றும், அவரை ஒரு பாடலிலாவது நடனமாட வைத்திருக்கலாம் என இயக்குநர் நெல்சனிடம் கூறியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அதற்கு, “உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக மட்டும் படத்தில் வைக்க முடியாது” என நெல்சன் கூறியதாகவும், அதற்குப் பதிலளித்த தான், “எனக்குப் பிடிக்கும் என்பதற்காகக் கேட்கவில்லை; மக்களுக்குப் பிடிக்கும் என்பதால்தான் கேட்டேன்” எனக் கூறியதாகவும் ரஜினிகாந்த் நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டார்.