அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிப்பு: எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ட்ரம்ப்

#world_news #LANKA4 #Peace #Nobel #Prize #DonaldTrump
Riya
1 hour ago
அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிப்பு: எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ட்ரம்ப்

2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை (09) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த பரிசு தொடர்பில் தொடர்ந்து தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தான் பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறியுள்ள ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு தன்னைவிட தகுதியானவர் எவரும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு பதவியேற்றதிலிருந்து, பல்வேறு மோதல்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார். 

இதன் அடிப்படையில், அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படவுள்ளதால், ட்ரம்ப் அந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!