இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கும் இந்திய பிரதமர் மோடி

#TamilCinema #LANKA4 #Building #NarendraModi #Music #Ilayyaraja #L4
Prasu
1 hour ago
இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கும் இந்திய பிரதமர் மோடி

சென்னை ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை அக்டோபர் 11ம் திகதி பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.

சென்னையில் பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 11ம் திகதி சென்னை வரவுள்ளார்.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடக்கிவைத்து, மெட்ரோ ரயிலில் போரூர் வரை பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு வருகிறார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, அந்த வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இறுதியாக ஐஐடி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். பின்னர், சென்னை பயணத்தை முடித்துவிட்டு டில்லி புறப்படுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!