1,540 கிராம உத்தியோகத்தர்களுக்கு இன்று நியமனக் கடிதங்கள்
#SriLanka
#Letters
#today
#LANKA4
#President
#AnuraKumaraDissanayake
#GramaNiladhari
Riya
1 hour ago
நாடளாவிய ரீதியில் நிலவும் கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், 1,540 புதிய கிராம உத்தியோகத்தர்களுக்கு நியமனக் கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அலரி மாளிகையில் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
புதிய கிராம உத்தியோகத்தர் சேவைப் பிரமாணம் வெளியிடப்பட்ட பின்னர், இந்தச் சேவைக்கான நியமனங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, நீண்ட காலமாக ரூ.5,000 ஆக காணப்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சீருடைக் கொடுப்பனவு, தற்போதைய அரசாங்கத்தால் ரூ.15,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.