கனடாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் 18 வயது இளைஞர் கைது
கனடாவின் யோக்டன் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர், பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்முறை இணையக் குழுவொன்றுடன் தொடர்புடைய காணொளிகளைப் பதிவேற்றியதாக குறித்த இளைஞர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இணைய நடவடிக்கைகள்" குறித்து கிடைத்த தகவலையடுத்து, பொலிஸாரின் வடமேற்கு பிராந்திய ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமலாக்கக் குழு கடந்த செப்டம்பர் 24ம் திகதி இந்த இளைஞரைக் கைது செய்தது.
'764' என்ற வன்முறைக் குழுவின் உறுப்பினராக, நிஜ உலக நடவடிக்கைகளைச் சித்தரிக்கும் தொடர்ச்சியான காணொளிகளை 'டெலிகிராம்' பயனரொருவர் பதிவேற்றியதாகக் கூறப்பட்டதையடுத்து விசாரணை தொடங்கப்பட்டது.
அத்துடன், 'டிஸ்கோர்ட்' மற்றும் 'டெலிகிராம்' ஆகியவற்றிலுள்ள 764 தொடர்பான பல கலந்துரையாடல் குழுக்களிலும் இந்த பயனர் குறிப்பிடப்பட்டிருந்ததை புலனாய்வாளர்கள் கண்டறிந்ததாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.