ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

#SriLanka #Gnanasara Thero #LANKA4 #campaign
Riya
2 hours ago
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி கையெழுத்து சேகரிப்பு

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 34ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

ஒக்டோபர் 9ஆம் திகதி காலை தேவேந்திர முனையில் பூஜை இடம்பெற்ற பின்னர், மாத்தறை, காலி, ஹபராதுவ மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் பிக்குகள், பிக்குணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!