மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த மாணவர் பேருந்து மோதி பலி - சாரதி கைது

#SriLanka #ARREST #Police #Student #Accident
Thamilini
1 hour ago
மோட்டார் சைக்கிளில் தவறி விழுந்த மாணவர் பேருந்து மோதி பலி  - சாரதி கைது

களுத்துறையின் வஸ்கடுவ பகுதியில் இன்று காலை (08) நடந்த விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். 

 பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று சுற்றுலாவுக்காக காலி பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களில் ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து, எதிரே வந்த பல்கலைக்கழக வேன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். 

  விபத்தில் காயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிசார் தெரிவித்தனர். 

 விபத்தில் உயிரிழந்தவர், களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பப் பீடத்தில் பயிலும் 21 வயதான சித்தும் சங்கல்ப என்ற மாணவர் ஆவார். 

 உயிரிழந்த மாணவர், தனது ஐந்து நண்பர்களுடன் கொழும்பிலிருந்து காலிக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நேர்ந்துள்ளது. 

 சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!