கருத்தை தெரிவித்தமைக்காக மட்டும் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்து
சவுதி அரேபியாவில் மதநிந்தனை குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை கருத்துச் சுதந்திர உரிமையின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால், உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை விடுத்துள்ளது.
சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
இந்நிலையில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்ததற்காக மட்டும் யாரும் சிறையில் அடைக்கப்படவோ அல்லது மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படவோ கூடாது என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.
இதற்கிடையில், அனோஜன் சிவராசா தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறையை, அவரது நிலை குறித்து விசாரிப்பதற்காக சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதர் இன்று (08) பார்வையிட உள்ளார்.
சிறையில் இருந்தபோது மற்றொரு கைதியால் அனோஜன் தாக்கப்பட்டு காயமடைந்த சம்பவம் குறித்து விசாரிக்க, தம்மாமில் உள்ள சிறைக்குத் தூதர் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.