சிவராசா அனோஜன் விவகாரம்: நாடாளுமன்றத்தில் அவசர கேள்விகள்

#SriLanka #Parliament #LANKA4 #Case #SivarasaAnojan
Abi
3 hours ago
சிவராசா அனோஜன் விவகாரம்: நாடாளுமன்றத்தில் அவசர கேள்விகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுவரும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் சிறையில் தாக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், அவரது பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று (07.10.2026) நாடாளுமன்றத்தில் அவசர கேள்விகளை எழுப்பினார்.

அனோஜன் கத்தியால் தாக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், சவுதி சிறைச்சாலை அதிகாரிகளின் தகவலின்படி, மற்றொரு கைதியுடன் ஏற்பட்ட மோதலில் நகங்களால் ஏற்பட்ட கீறல் காயங்களே அவருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

கத்தி பயன்படுத்தப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு தற்போது அடையாளம் காணப்பட்ட அச்சுறுத்தல் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

எனினும், இலங்கைத் தூதரக அதிகாரிகள் அனோஜனை நேரடியாக சந்தித்து அவரது உடல்நிலையை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனோஜனின் வழக்கில் சவுதி அரசுத் தரப்பின் மேல்முறையீடு செப்டெம்பர் 23ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இலங்கை தரப்பின் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டை ஒக்டோபர் 17ஆம் திகதிக்குள் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அனோஜன் தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவரது பாதுகாப்பு மற்றும் சட்ட நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“சிவராசா அனோஜனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார். :::

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!