வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு பாதுகாப்பின் கீழ் ஷிரந்தி ராஜபக்ஷ தடுத்து வைப்பு

#SriLanka #Prison #Welikada #Security #Shiranthi Rajapaksa
Thamilini
2 hours ago
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறப்பு பாதுகாப்பின் கீழ் ஷிரந்தி ராஜபக்ஷ தடுத்து வைப்பு

சிறைக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடையில் உள்ள 'மேகசின்' (Magazine) சிறைச்சாலையில் சிறப்புப் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள பாதுகாப்பான பகுதியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பல்லதென்ன தெரிவித்தார். 

 அரசு வங்கி ஒன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கைது செய்யப்பட்டார். 

 அவரை அக்டோபர் 13 ஆம் திகதி வரை சிறைக்காவலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவிட்டது.

சந்தேகநபரான அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் நீதவான் உத்தரவிட்டதாக 'தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, நேற்று (07) சிறைச்சாலை பேருந்து மூலம்   ஷிரந்தி ராஜபக்ஷ வெலிக்கடையில் உள்ள 'மேகசின்' சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற உத்தரவுக்கமைய அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் சேனக பல்லதென்ன தெரிவித்தார். 

 இதேவேளை, அதே சம்பவம் தொடர்பாக லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசத்தை (முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர்) பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு பிணைப் பத்திரங்களின் அடிப்படையில் காரியவசம் விடுவிக்கப்பட்டதுடன், அவர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!