பாரதிபுரத்தில் வீட்டுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பில் மக்கள் விசனம்.

#SriLanka #scheme #House
Abi
1 hour ago
பாரதிபுரத்தில் வீட்டுத்திட்ட ஒதுக்கீடு தொடர்பில் மக்கள் விசனம்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் நீண்டகாலமாக வீடற்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை எனவும், காணிகள் இல்லாதவர்களுக்கும், வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்காகவே புதிதாக காணிகளை கொள்வனவு செய்தவர்களுக்கும் ‘திட்வா’ வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பாரதிபுரம் பகுதியில் நீண்டகாலமாக சொந்த வீடின்றி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.

எனினும், வீட்டுத்திட்டத்திற்காக புதிதாக காணிகளை கொள்வனவு செய்த சிலருக்கும், முன்னதாக காணி உரிமை இல்லாதவர்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நீண்டகாலமாக வீடற்ற நிலையில் வாழ்ந்து வரும் தங்களுக்கு இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

வீட்டுத்திட்டங்களை தெரிவு செய்வதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீண்டகாலமாக வீடற்ற நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி வீட்டுத்திட்டங்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாரதிபுரம் பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி, தகுதியான வீடற்ற குடும்பங்களுக்கு நியாயமான முறையில் வீட்டுத்திட்டங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!