ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை – சாதாரண கைதிகள் அறையில் தங்க வைப்பு

#SriLanka #Prison #Gnanasara Thero #LANKA4 #prisoner
Abi
54 minutes ago
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை – சாதாரண கைதிகள் அறையில் தங்க வைப்பு

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு இன்று (05) பிற்பகல் கைதிகளுக்கான சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இதுவரை காவி ஆடையில் இருந்த ஞானசார தேரர், சிறைச்சாலை விதிமுறைகளுக்கு அமைய தற்போது கைதிகளுக்கான சீருடையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஞானசார தேரர் விசேட அறையில் அல்லாது, ஏனைய சாதாரண கைதிகள் தங்க வைக்கப்படும் சிறை அறையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நடைமுறைப்படுத்த உத்தரவு நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசார தேரரை சிறைச்சாலை அதிகாரிகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து, வழக்கில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையின் எஞ்சிய காலத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை அனுபவிக்கும் வகையில் அவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறைச்சாலை சீருடையும் வழங்கப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!