பிரான்சில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேனில் இருந்து சடலம் மீட்பு

#Death #FRANCE #LANKA4 #migrants #vehicle #L4
Prasu
3 hours ago
பிரான்சில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேனில் இருந்து சடலம் மீட்பு

சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு பிரான்சில் உள்ள நெடுஞ்சாலை ஓய்வுதளம் ஒன்றில் குறித்த வாகனம் நிறுத்தப்பட்டபோது இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 47 வயடைய ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர் துப்பாக்கிச்சூட்டு காயங்களால் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேநேரம் குறித்த வாகனத்திற்குள் பிரான்ஸ் எல்லைக்குள் முறையற்ற வகையில் தங்கியிருந்த சுமார் 10 வெளிநாட்டினர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ராய்ஸ் நகர அரசு வழக்கறிஞர் இசபெல் வெரிசிமோ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!