5 மாதங்களின் பின்னர் கோட்டாபயவின் முன்னாள் செயலாளருக்கு பிணை!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#ARREST
#LANKA4
#Court
#Bail
#Secretary
Abi
29 minutes ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளராகப் பணியாற்றிய சுகீஷ்வர பண்டாரவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (18) பிணை வழங்கியுள்ளது.
சுமார் ஐந்து மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சுகீஷ்வர பண்டார கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.