தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு – பிரதமர் அறிவிப்பு!
#SriLanka
#PrimeMinister
#Development
#University
#Harini Amarasooriya
Abi
1 hour ago
அரச நிறுவனமான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தை (NISD), களனிப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் அவற்றுக்கான காலக்கெடுவைத் தீர்மானிப்பதற்காகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் களனிப் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.