யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி
#SriLanka
#Attack
#Elephant
#LANKA4
#family
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Riya
3 hours ago
யானை தாக்குதலுக இலக்காகி குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாவில் பகுதியில் மாடுகளை பராமரிக்கும் நோக்குடன் காவலுக்காக 24.09.2026 அன்று மதியம் சென்றவர் இன்று 25.09.2026 வரை காணாத நிலையில் குறித்த பகுதியில் உறவினர்கள் சென்று தேடியுள்ளனர்.
இதன் பொழுது யானைதாக்குதலுக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் சடலமாக இனம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக ஜெயபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவிடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கனகரத்தினம் கந்தசாமி என்ற 65 வயதுடைய மட்டுவில்நாடு மேற்கு பூநகரி பகுதியைச் சேர்ந்தவரே சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.