22ஆவது திருத்தச் சட்டமூலம்: நாடாளுமன்ற விவாதமும் எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் பேரணியும்

#SriLanka #Protest #LANKA4 #Rally #Opposition #Bill #Amendment #Debate #ADDA #ADDAADS #SHELVA #ADDAPOOJA
Riya
1 hour ago
22ஆவது திருத்தச் சட்டமூலம்: நாடாளுமன்ற விவாதமும் எதிர்க்கட்சியின் எதிர்ப்புப் பேரணியும்

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நாளையும் (24) நாளை மறுதினமும் (25) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

விவாதத்தின் முடிவில் இந்த திருத்தச் சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் அவசியமாகும்.

இதேவேளை,அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி நாளை(24) பொள்துவ சந்தியில் நடைபெறவுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சியின் பல தரப்பினரும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தின் பின்னரே இணைந்த எதிர்க்கட்சியின் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபாநாயகர் நேற்று (22) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!