சர்வதேச சந்தையில் வலுப்பெறும் இலங்கை – ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி!
#SriLanka
#International
#Export
#LANKA4
#Market
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
1 hour ago
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 12.01 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 11.52 பில்லியன் டொலர்களாக இருந்த ஏற்றுமதி வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 4.26 சதவீத வளர்ச்சியாகும்.
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 9.41 பில்லியன் டொலர்களாகவும், சேவைகள் ஏற்றுமதி வருமானம் 2.60 பில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், 2026 ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் மொத்த ஏற்றுமதி வருமானம் 1.60 பில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.77 சதவீத அதிகரிப்பாகும்.