உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பு!

#SriLanka #Easter Sunday Attack #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதிரடி தீர்ப்பு!

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட 15 பேருக்கு 200 முதல் 260 ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளில் ஒருவருக்கு 260 ஆண்டுகளும், நான்கு பேருக்கு 240 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு 220 ஆண்டுகளும், மேலும் ஐந்து பேருக்கு 200 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகளுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலில் கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் முன்னணி ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் 25 பேருக்கு எதிராக 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், நீண்டகால விசாரணையின் பின்னர் நேற்று (22) மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு இறுதித் தீர்ப்பை அறிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது 2,300க்கும் மேற்பட்ட அரச தரப்பு சாட்சிகள் சாட்சியமளித்திருந்ததுடன், குற்றச்சாட்டுகள் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

குற்றச்சாட்டுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சதி செய்தல், தாக்குதல்களுக்கு உதவுதல் மற்றும் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புதல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கியிருந்தன.

நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஆதாரங்களை பரிசீலித்த பின்னர், 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்மானித்து இந்தத் தண்டனைகளை விதித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!