சுரேஷ் சாலேவின் ரிட் மனு தொடர்பான விசாரணை - நவம்பரில் இறுதி தீர்மானம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சல்லே தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை விசாரிக்க அனுமதிப்பதா வேண்டாமா என்பது தொடர்பான இறுதி முடிவை வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீண்ட பரிசீலனைக்குப் பின்னர், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுதாரர் சுரேஷ் சல்லே சார்பில் ஜனாதிபதி சட்ட ஆலோசகர் சஞ்சீவ ஜெயவர்தனவின் வாய்மொழி வாதங்கள் நேற்று நிறைவடைந்தன.
மேலும், சம்பந்தப்பட்ட தரப்பினர் எழுத்துப்பூர்வமான வாதங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவை விசாரிக்க அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்த உத்தரவும், இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் மீதான உத்தரவும் நவம்பர் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என அந்த அமர்வு தெரிவித்துள்ளது.