ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் அதிரடி!

#Russia #LANKA4 #Economic #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Riya
1 hour ago
ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், யுக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அந்த நாட்டுக்கு எதிராக விரிவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகுக்கும் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார். 

இந்தச் சட்டத்தின் மூலம், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும் கடுமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை மீறி அந்தநாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளுக்கு மேலதிக வரிகளை விதிக்கும் அதிகாரமும் ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவர அந்தநாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை, குறித்த சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மேலதிக தடைகள் மற்றும் வரிகள் தொடர்பான விபரங்கள் அமெரிக்க நிர்வாகத்தால் பின்னர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!