ஜனாதிபதி தலைமையில் பொலன்னறுவையில் இன்று பிரம்மாண்ட மக்கள் பேரணி!
#SriLanka
#Polonnaruwa
#LANKA4
#President
#Rally
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Lakhi
48 minutes ago
“அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நன்மை” என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி தலைமையில் மற்றுமொரு மக்கள் பேரணி இன்று (12) நடைபெறவுள்ளது.
இந்த மக்கள் பேரணி பொலன்னறுவை, திம்பிரியங்கடுவ பகுதியில் அமைந்துள்ள தீப உயன வளாகத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இந்த மக்கள் பேரணியில் அரசாங்கத்தின் இரண்டு ஆண்டுகால செயற்பாடுகள் மற்றும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பேரணியில் பெருமளவான ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே