பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளை புனரமைக்கக் கோரி கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்..
“உயிர்கள் முக்கியம்! பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் வேண்டும்!
” கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் புகையிரதக் கடவைகளை உடனடியாக புனரமைத்து, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக பொதுமக்களின் உயிருக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுவரும் நிலையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு, ஆபத்தான புகையிரதக் கடவைகளை புனரமைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“மக்களின் உயிர் பாதுகாப்பு அரசின் கடமை!” என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெறவுள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆர்ப்பாட்ட விபரங்கள்
- நாள்: 31 ஆகஸ்ட் 2026 (திங்கட்கிழமை)
- நேரம்: காலை 9.00 மணி
- இடம்: கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக ஏற்பாடு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை மற்றும் பொது அமைப்புகள் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்படவுள்ளன.
“இன்று நடவடிக்கை எடு! நாளை உயிரிழப்பைத் தவிர்!” என்ற தொனிப்பொருளில், மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே