நேபாள மக்களுடன் இலங்கை துணை நிற்கிறது – சஜித்
#SriLanka
#Sajith Premadasa
#people
#LANKA4
#Nepal
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
Abi
1 hour ago
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தத் துயரமான நேரத்தில் இலங்கை மக்களும் அரசாங்கமும் நேபாள மக்களுடன் துணை நிற்பதாக தெரிவித்துள்ளார்.
பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காணாமல் போயுள்ள நூற்றுக்கணக்கானோருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், பேரழிவினால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் இலங்கையின் முழுமையான ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வரும் நேபாள மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே