சௌகார் ஜானகியின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல்

#Death #Actor #TamilCinema #LANKA4 #Singer #condolence #L4
Prasu
1 month ago
சௌகார் ஜானகியின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல்

தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், சவுகார் ஜானகி மறைவுக்கு வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எகஸ் தள பதிவில் “ செளகார் ஜானகி, கலைப் பெண்களில் பெருமைக்குரிய பெருமாட்டி. பதின்பருவம் முதல் உதிர்பருவம் வரை நகர்ந்துகொண்டே இருந்த நட்சத்திரம்.

பெண்ணினத்தின் காத்திரமான பாத்திரங்கள் அனைத்தையும் நடித்துக்காட்டிய நாயகி.

எம்.ஜி.ஆர் - சிவாஜி - ஜெமினி என்ற முப்பெரும் கலைஞர்களுக்கும் ஈடுகொடுத்த ஒப்பிலா நடிகை.

ஆங்கிலத்தைத் தாய்மொழிபோல் பேசும் சில நடிகைகளுள் தலைசிறந்த செளகார் ஜானகி க்கு என் அஞ்சலி என்று குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!