பிரான்ஸ் காட்டுத்தீ - சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது

#Arrest #France #Lanka4 #Rescue #WildFire #L4
Prasu
3 hours ago
பிரான்ஸ் காட்டுத்தீ - சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது

பிரான்ஸில் கடந்த ஜூலை 1ஆம் திகதி முதல் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 474 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வரலாறு காணாத வெப்ப அலையால் பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் கடுமையான காட்டுத்தீயை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 183 பேர் சிறார்கள் என பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் திட்டமிட்டு காட்டுத்தீ ஏற்படுத்தியதாகவும் ஏனையோர் தற்செயலாக தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4