பிரான்சில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப் போர் குண்டுகள் மீட்பு

#FRANCE #LANKA4 #Rescue #Bomb #WorldWar #WildFire #L4
Prasu
1 month ago
பிரான்சில் ஏற்பட்ட காட்டுத்தீயில் நூற்றுக்கணக்கான இரண்டாம் உலகப் போர் குண்டுகள் மீட்பு

தெற்கு பிரான்சில் உள்ள லே போர்ஜ் கிராமத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில், 400 பழமையான குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஒரு பதுக்கிவைப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்களின் சத்தம் என்று கருதப்பட்ட இந்த வெடிப்புகள், தீயின் வெப்பத்தால் வெடித்த இரண்டாம் உலகப் போர்க் கால வெடிபொருட்களாக இருக்கலாம் என்று உள்ளூர் தீயணைப்புத் துறைத் தலைவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறினார்.

தீ விபத்து ஏற்பட்ட இரண்டாவது இரவில் 100க்கும் மேற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மேயர் மார்ஷியல் சானினெட்டி, பிரெஞ்சு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!