முதல் முறையாக பிரான்சின் அணுசக்திப் பயிற்சியில் இணையும் ஜெர்மனி
இந்த ஆண்டின் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு இராணுவ அணுசக்திப் பயிற்சியில், ஜெர்மனியின் மரபுசார் படைகள் பங்கேற்கும் என்று பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ஜெர்மனியில் முடிவடைந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் இந்தத் திட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஒரு பிரெஞ்சு அணுசக்திப் பயிற்சியில் ஜெர்மன் படைகள் பங்கேற்பது இதுவே முதல் முறை.
ஐரோப்பாவில் தனது பாதுகாப்புச் சுமையைக் குறைப்பதாக அமெரிக்கா சமிக்ஞைகள் தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் தனது அணுசக்தித் தடுப்பை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவுபடுத்தும் ஒரு முயற்சியை ஊக்குவித்து வரும் வேளையில் இது நிகழ்ந்துள்ளது.
இந்த இருதரப்பு ஒத்துழைப்பு நேட்டோவின் அணுசக்தித் தடுப்பிற்கு மாற்றாக அமையாது, மாறாக அதற்குத் துணையாகவே இருக்கும் என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே