உலகக்கோப்பை சரித்திர நாயகன் கிலியன் எம்பாப்பே: 3 தொடர்களில் அசுர சாதனை!
பராகுவே அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்துடன், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றின் மிக உயரிய சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) தன்வசப்படுத்தியுள்ளார்.
மூன்று வெவ்வேறு உலகக்கோப்பை தொடர்களின் நாக்-அவுட் (Knock-out) சுற்றுகளில், ஒவ்வொன்றிலும் தலா 3 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்த உலகின் ஒரே ஒரு வீரர் என்ற வரலாற்று மகுடத்தை எம்பாப்பே சூடியுள்ளார்.
அவரது உலகக்கோப்பை கோல் விபரங்கள்:
2018 உலகக்கோப்பை: 3 கோல்கள்
2022 உலகக்கோப்பை: 5 கோல்கள்
2026 உலகக்கோப்பை: இதுவரை 3 கோல்கள்
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக உலகக்கோப்பை அரங்கில் 19 போட்டிகளில் விளையாடி 19 கோல்களை அடித்து அவர் அசுர சாதனை படைத்துள்ளார்.
வெறும் 27 வயதில் கால்பந்து உலகையே மிரள வைக்கும் எம்பாப்பேயின் இந்த அசுரவேட்டையுடன் பிரான்ஸ் அணியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே