IPL M38 - சூப்பர் ஓவர் முறையில் லக்னோ அணியை வீழ்த்திய கொல்கத்தா
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 38வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதியது.
இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சியை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. அந்தவகையில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்தது.
கொல்கத்தா அணி சர்ப்பில், கேமரூன் கிரீன் 35 ஓட்டங்களும் ரிங்கு சிங் 83 ஓட்டங்களும் எடுத்தனர்.
இதையடுத்து 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ களமிறங்கியது.
லக்னோ அணி சார்பில், மார்க்ரம் 32 ஓட்டங்களும் ரிஷப் பண்ட் 42 ஓட்டங்களும் பதோனி 22 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆட்டத்தில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் லக்னோ அணியின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தை எதிர்கொண்ட முகமது சமி, சிக்சர் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.
இதன் பின்னர் சூப்பர் ஓவர் முறையில் லக்னோ அணி இரண்டு விக்கெட்களை இழந்து ஒரு ஓட்டங்களை மட்டுமேஎடுத்தது.
இதன் பின்னர் 2 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிசெய்தது.
(வீடியோ இங்கே )