மின்சாரக் கட்டணத்தில் மாற்றமில்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய அமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) சமர்ப்பித்த மின்சார விநியோகச் செலவு அறிக்கையை மீளாய்வு செய்த பின்னரே ஆணைக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அனைத்துக் கணக்கீடுகளின்படி, நடப்பு காலாண்டில் மின்சார விநியோகத்திற்கான செலவு 0.3 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதால், கட்டணத் திருத்தம் அவசியமில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த இரண்டாவது காலாண்டில் நடைமுறையில் இருந்த மின்சாரக் கட்டண முறைமையே தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நிலக்கரியின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஏற்பட்ட 3,366 மில்லியன் ரூபாய் மேலதிக செலவை, மின் உற்பத்திச் செலவில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தாத வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே