டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி

#India #T20 #Cricket #WorldCup #England #L4
Prasu
3 months ago
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்திய அணி

டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ஓட்டங்கள் குவித்தது.

அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 89 ஓட்டங்களும் ஷிவம் துபே 43 ஓட்டங்களும் இஷான் கிஷன் 39 எடுத்தனர்.

இதையடுத்து, 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. 

நிதானமாக விளையாடிய பெத்தேல் 105 ஓட்டங்களும் வில் ஜாக்ஸ் 35 ஓட்டங்களும் ஜாஸ் பட்லர் 25 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4