பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி

#India #Pakistan #T20 #Cricket #WorldCup
Prasu
2 hours ago
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி

2026 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் அதிகபட்சமாக 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் சூரியகுமார் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பின்னர் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 114 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. 

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் உஸ்மான் கான் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றதுடன் ஷஹீன் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, சுப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!