டி20 உலக கிண்ண தொடர் - இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி

#SriLanka #T20 #WorldCup #Ireland
Prasu
3 hours ago
டி20 உலக கிண்ண தொடர் - இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி

ICC இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் மெண்டிஸ் 56 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்நிலையில் 164 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. 

அயர்லாந்து அணி சார்பில் ஹரி டெக்டர் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!