பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடைகள் தொடர்பில் பிரதமரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

#SriLanka #Switzerland #Sri Lanka Teachers #ADDA #Harini Amarasooriya #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Soruban
1 hour ago
பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆடைகள் தொடர்பில் பிரதமரிடம்  விடுக்கப்பட்ட கோரிக்கை!

ஒவ்வொரு சீருடைக்கும் ஒரு சிறப்பும் மரியாதையும் இருக்கின்றது. அதேபோல் ஆசிரியர்களுக்கும் ஒரு சீருடை இருந்தால். இவர்களை இலகுவில் அடையாளம் காண்பது மட்டுமல்ல அவர்களுக்கான மதிப்பையும் பெறுவார்கள். 

இலங்கையில் பல துறைகளில் சீருடை நடைமுறையில் இருப்பதால் ஆசிரியர்களுக்கும் சீருடை இருந்தால் இது அவர்களுடைய நேரத்தையும், பொருளாதாரத்தையும் மிச்சப்படுத்தும் என்பது எனது தாழ்மையான கருத்து என பிரதமர் ஹரிணி அமர சூரியவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

பிரதமர் பொருளாதார உச்சிமாநாட்டிற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த வேளை இது தொடர்பில் அங்கு வசிக்கும் சோதிடர் சுதாகரால் கொடுக்கப்பட்ட மனுவில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த மனுவில், நாடு முழுதும்  ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் கூட இல்லை. மாவட்டங்களும் அல்லது ஒவ்வொரு பாடசாலைகளும் தங்கள் பாடசாலைக் கொடி (இலட்சினை) அதற்கு அமைவாக வடிவமைத்துக் கொள்ளலாம். 

images/content-image/1769512111.jpg

முக்கியம் எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதே. சேலையைத் தவிர்த்தால் இதிலே இன்னும் சிறப்பு. பெண் ஆசிரியர்கள் ஆடைகளுக்கும் அது தொடர்பான அணிகலன்களும் பெருமளவு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்கிறார்கள். 

இப்பொருட்களுக்கான இறக்குமதிச் செலவு பல கோடிகள்! பில்லியன் ரூபாய்கள் நாம் ஆடை ஏற்றுமதில் உழைத்ததை இந்த இறக்குமதிக்கு செலவு செய்கிறோம். சேலை என்பது நமது பாரம்பரிய உடையாக இருந்தாலும் இன்று ஒவ்வொருவரும் சில மணி நேரம் பிரயாணத்தில் தங்கள் நேரத்தை செலவ செலவு செய்ய வேண்டியுள்ளது அதைவிட சேலையை பாதுகாக்கவும் செயலையோடு பயணிக்கவும் அது பொருத்தமானதாகவும் இல்லை. 

 தினமும் ஒரே மாதிரியான சேலையை அணிவது அணிய விரும்புவதும் இல்லை அதேவேளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேலையை தயார் செய்வதற்கும் பெரும் நேரம் செலவாகிறது இப்படி போக்குவரத்திலும் தம்மை தயார்படுத்துவதிலும் நேரத்தை செலவு செய்தால் பின்பு குடும்பத்திற்கும் கல்வி கற்பிப்பதற்கும் மிகக் குறைவாக அமைகிறது. அதேபோல அவர்களுடைய வேலைப்பளு அவர்களை உளவியல் ரீதியாக உடல் ரீதியாகவும் பாதிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!