ஓய்வு பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸை சந்தித்த நடிகை பாவனா
#Cinema
#Actress
#Kerala
#astronaut
#Indian
Prasu
1 hour ago
நாசாவின் முன்னாள் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கேரளத்தில் நடைபெற்ற இலக்கியத் திருவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் நடிகை பாவனாவும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
இது குறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாவனா, “உத்வேகமளிக்கக்கூடிய சாதனையாளர்களுடன் மேடையில் ஒருங்கே இருக்கும் பாக்கியம் எமக்குக் கிடைத்தததற்கு நன்றி என்றும் இது தமது வாழ்நாள் மாற்றத்திற்கானதொரு தருணம்” என்று குறிப்பிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
(வீடியோ இங்கே )