சுவிட்சர்லாந்தில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு!

#SriLanka #Switzerland #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
சுவிட்சர்லாந்தில் இருக்கும் இலங்கை தூதரகத்தின் கவனத்திற்கு!

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் புலம் பெயர் இலங்கை தமிழர்கள், தங்களின் பிறப்பத்தாட்சி பத்திரம் மற்றும் கடவுச்சீட்டுக்களை புதுப்பிப்பதில் காலதாமதத்தை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. 

அங்கு வாழும் இலங்கை பிரஜைகள் ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் மேற்படி இரு பத்திரங்களையும் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளனர். 

இருப்பினும் இலங்கையில் உள்ள தூதரகத்தில் அவர்களின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அல்லது தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது தொடர்பில் கேள்வி எழுப்பும்போது தொலைபேசி இலக்கம் ஒன்று தரப்படுவதாகவும், இருப்பினும் அந்த இலக்கத்தினால் எவ்வித பயனும் இல்லை என்றும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

இதன் காரணமாக பலர் வேறு இடங்களுக்கு செல்ல முடியாமலும், தங்களின் அலுவல்களை செய்ய முடியாமலும் தவிப்பதாக  முறைப்பாடு அளித்துள்ளனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!