ஆஸ்கார் விருது - டைட்டானிக் சாதனையை முறியடித்த சின்னர்ஸ் திரைப்படம்
#Award
#Oscar
#Movie
Prasu
3 hours ago
திரையுலகில் சர்வதேச அளவில் பெருமைக்குரிய விருதாகக் கருதப்படும் 98வது ஆஸ்கர் விருது மார்ச் 16ம் திகதி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.
இதில் 24 பிரிவுகளில் வழங்கப்படும் விருதுக்கான இறுதி பரிந்துரை பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் 16 பிரிவுகளில் பரிந்துரை ஆகி ஆஸ்கார் வரலாற்றிலேயே அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட படமாக சின்னர்ஸ் (Sinners) திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக ஆல் அபவுட் ஈவ், டைட்டானிக் மற்றும் லாலா லேண்ட் ஆகிய படங்கள் 14 பிரிவுகளில் போட்டியில் இருந்த நிலையில் சின்னர்ஸ் அந்த சாதனையை முறியடித்துள்ளது.
(வீடியோ இங்கே )