விதிமுறைகளை மீறி செயல்பட்ட தனியார் மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மூன்று தனியார் மருந்தகங்களுக்கு 950,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருந்தகங்கள் மீது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்தல், உரிமம் இல்லாமல் மருந்தகங்களை இயக்குதல் மற்றும் மருந்தாளுநரை பணியமர்த்தாமல் மருந்தகத்தை இயக்குதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதன்படி, நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு 300,000 அபராதமும், அம்பகோட்டேயில் உள்ள தல்கஸ்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு மருந்தகத்திற்கு 500,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குற்றத்தை ஒப்புக்கொண்ட கல்கமுவ பகுதியில் உள்ள மற்றொரு மருந்தகத்திற்கு 150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்