தற்காலிகமாக மூடப்படும் வடக்கு ரயில் பாதை - பயணிகளின் கவனத்திற்கு!

#SriLanka #Train #service #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
தற்காலிகமாக மூடப்படும் வடக்கு ரயில் பாதை - பயணிகளின் கவனத்திற்கு!

வடக்கு ரயில் பாதையை நாளை (19.01) முதல் பல இடங்களில் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய மகாவ - அனுராதபுரம் ரயில் பாதை நாளை (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரியா தெரிவித்தார்.

அதேபோல்  மகாவ - ஓமந்த ரயில் பாதையை 26 ஆம் திகதி முதல் முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதையின் மேம்பாட்டுப் பணிகளும் நாளை (19) முதல் தொடங்கும் என்றும் திணைக்களம் கூறுகிறது.

மகாவ - ஓமந்த ரயில் பாதையில் உள்ள ஐந்து ரயில் பாலங்கள் மாற்றப்பட உள்ளன, மேலும் காட்டு யானைகள் செல்வதற்காக கட்டப்பட்ட சுரங்கப்பாதையின் புதுப்பித்தல் பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளiம குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!