தற்காலிகமாக மூடப்படும் வடக்கு ரயில் பாதை - பயணிகளின் கவனத்திற்கு!
வடக்கு ரயில் பாதையை நாளை (19.01) முதல் பல இடங்களில் தற்காலிகமாக மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மகாவ - அனுராதபுரம் ரயில் பாதை நாளை (19) முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரியா தெரிவித்தார்.
அதேபோல் மகாவ - ஓமந்த ரயில் பாதையை 26 ஆம் திகதி முதல் முழுமையாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதையின் மேம்பாட்டுப் பணிகளும் நாளை (19) முதல் தொடங்கும் என்றும் திணைக்களம் கூறுகிறது.
மகாவ - ஓமந்த ரயில் பாதையில் உள்ள ஐந்து ரயில் பாலங்கள் மாற்றப்பட உள்ளன, மேலும் காட்டு யானைகள் செல்வதற்காக கட்டப்பட்ட சுரங்கப்பாதையின் புதுப்பித்தல் பணிகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட உள்ளiம குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்