புத்தளம் உடப்பு செல்வபுரம் கரைவலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பு!
புத்தளம் உடப்பு செல்வபுரம் பகுதியில் கரைவலை தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைவலையை வலைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி கரைவலை தொழிலாளர்கள் கூறும்போது, கடந்த பல காலங்களில் கரைவலையை வலைக்கும் போது கூடுதலான மனித வலு காணப்பட்டது.
அந்தக் கட்டத்தில் உழவு இயந்திரம் கரைவலை இழுப்பதற்கு பாவிக்கப்பட வில்லை. அதன் பிற்பாடு அண்மைக் காலத்தில் உழவு இயந்திரத்தில்“விஞ்ஜ்”சுழற்சி சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அதை நிறுத்தும்படி அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் உடப்பு பகுதியில் உள்ள 17கரைவலை உரிமையாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் ஒரு கரைவலையில் இருநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமதுவாழ்வாதாரத்தை இழந்த நிலையில் கஷ்டப்படுகிறோம்.
ஆகவே ஓரிரு கரைவலையில் மட்டும் ஆட்கள் காணப்பட்ட போது அதனை வலைக்க முடியும். ஆட்கள் குறைவாக இருக்கின்ற கரைவலையை நடத்த முடியாத சூழ்நிலை புத்தளம் உடப்பு செல்வபுரம் கரைவலைத் தொழிலாளர்கள் கடும் பாதிப்பு காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அதிகாலையில் தொழிலுக்கு வந்தாலும் மீண்டும் வீட்டுக்கே இவர்கள் செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது என்றனர்
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்