இன்றைய ராசிபலன் (10.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
10 hours ago
இன்றைய ராசிபலன் (10.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பரணி: சுறு சுறுப்பாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கார்த்திகை 1: மறைமுகத் தொல்லைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். பிள்ளைகளின் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். ரோகிணி: உறவுகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னையை பேசி முடிப்பீர்கள். மிருகசீரிடம் 1,2: பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்பட்டு வெற்றி அடைவீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திருவாதிரை: உழைப்பு அதிகரிக்கும். பிறரை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். கடன்காரர்களின் தொல்லை முடிவிற்கு வரும். ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும்.

சிம்மம்

மகம்: வரவால் வளம் காணும் நாள். ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். பூரம்: திட்டமிட்டு செயல்படுவீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வீடுதேடி வருவர். உத்திரம் 1: இழுபறியாக இருந்த வேலையை போராடி முடிப்பீர். விருப்பம் பூர்த்தியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். அஸ்தம்: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சித்திரை 1,2: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் இருக்கும்.

துலாம்

சித்திரை 3,4: தடைகளைத் தாண்டி வெற்றியடையும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். சுவாதி: குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். ஆடம்பர செலவால் கையிருப்பு கரையும். விசாகம் 1,2,3: இழுபறியாக இருந்த வேலை முடியும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

விருச்சிகம்

விசாகம் 4: வராமல் இருந்த பணம் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். கேட்டை: நீண்ட நாளாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். கடன் கொடுத்த பணம் கைக்கு வரும்.

தனுசு

மூலம்: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். தொழிலில் இருந்த பிரச்னை தீரும். பூராடம்: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: முன்னேற்றமான நாள். பெரியோரின் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். திருவோணம்: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும். அவிட்டம் 1,2: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகள் வேண்டாம். சதயம்: குடும்பத்தில் சில பிரச்னைகள் தோன்றும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பூரட்டாதி 1,2,3: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மீனம்

பூரட்டாதி 4: குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அக்கம் பக்கத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: நண்பர்கள் உங்களைத் தேடி வருவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ரேவதி: எடுக்கும் முயற்சி ஆதாயமாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!