நடிகர் விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிலம்பரசன்
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் 'ஜனநாயகன்'.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த திரைப்படம் ஜன நாயகன் பொங்கலை முன்னிட்டு ஜன 9ம் திகதி உலகெங்கும் வெளியாக இருந்தது. வெளிநாட்டில் மட்டுமே முன்பதிவில் சுமார் ரூ.60 கோடி வரைக்கும் டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்த நிலையில், படத்திற்கான சான்றிதழ் அளிக்காததால் படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாளை காலை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில், நடிகர் சிலம்பரசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்புள்ள விஜய் அண்ணா, பின்னடைவுகள் எப்போதும் உங்களைத் தடுத்ததில்லை.
இதைவிட பெரும் புயல்களைத் தாண்டி வந்துவிட்டீர்கள்.
இதுவும் கடந்து போகும். ‘ஜனநாயகன்’ வெளியாகும் அன்றே உண்மையான திருவிழா ஆரம்பமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )