மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
#India
#beach
#shop
#HighCourt
Prasu
15 hours ago
தமிழகத்தின் மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்றது.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறம் நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மெரினாவில் உணவு பொருட்கள், பொம்மை கடைகள், பேன்சி கடைகள் என 300 கடைகள் மட்டும் அமைக்க அனுமதி கொடுத்தனர்.
(வீடியோ இங்கே )