சுவிஸ் மதுபான விடுதி விபத்து - நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

#Death #Switzerland #government #fire #mourning
Prasu
5 months ago
சுவிஸ் மதுபான விடுதி விபத்து - நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு

சுவிட்சர்லாந்தின் கிரான்ஸ்-மொன்டானா பகுதியில் புத்தாண்டு தினத்தன்று 40 இளைஞர்களின் உயிரைப் பறித்த தீ விபத்துக்காக நாடு முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

விபத்து நடந்த விடுதிக்கு அருகிலுள்ள தேவாலயங்களில் நினைவேந்தல் வழிபாடுகள் நடைபெற்றதோடு சுவிஸ், பிரான்ஸ் மற்றும் இத்தாலியத் தலைவர்கள் இதில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, விபத்துக்குக் காரணமான ‘லெ கான்ஸ்டலேஷன்’விடுதியின் உரிமையாளர் ஜாக் மொரெட்டி, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லலாம் என்ற அச்சத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஷாம்பெயின் போத்தலில் கட்டப்பட்டிருந்த மத்தாப்பு தீப்பொறி மேல்தளத்தில் பட்டதே விபத்துக்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கடந்த 5 ஆண்டுகளாக அந்த விடுதியில் எவ்வித பாதுகாப்பு சோதனைகளும் நடத்தப்படவில்லை என உள்ளூர் அதிகாரிகள் ஒப்புக்கொண்டிருப்பது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4