அதிகமாக பதட்டமாக உணர்கிறீர்களா? சில தீர்வுகள் இதோ!!

#SriLanka #Health #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
20 hours ago
அதிகமாக பதட்டமாக உணர்கிறீர்களா? சில தீர்வுகள் இதோ!!

உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.

இது தொடர்பில் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் சில விடயங்கள்,

பதட்டம் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

 உங்களுக்கு எப்போதாவது மார்பு இறுக்கம், வயிற்றில் அசௌகரியம் அல்லது இதயத்துடிப்பு அதிகமாக இருப்பது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, அப்போது ஏதோ பெரிய அளவில் நமக்கு பிரச்னை இருப்பதாக பயந்து பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகளை பெற்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளையும் பலமுறை செய்தும், “எல்லாம் நன்றாக இருக்கிறது” என்று கூறப்பட்டது.

 ஆனாலும், அந்த பிரச்னை அப்படியே இருக்கிறது என்றால் என்ன செய்ய வேண்டும் என்று நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மன நல மருத்துவர் வி.மிருதுல்லா அபிராமி. இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை: நீ தனியாக இல்லை. நான் உன்னுடன் இருக்கிறேன் – இந்த உடல் அறிகுறிகள் உண்மையானவை. பலர் இதை தினமும் சந்திக்கிறார்கள். அவை பெரும்பாலும் உடல் ரீதியான பிரச்னையால் ஏற்படுவதில்லை, அவை பதட்டம் அல்லது கவலையால் ஏற்படும் உடல் அறிகுறிகளாகும்.

மனதின் அறிகுறிகள் என்ன?

 தொடர்ச்சியான கவலை அல்லது பயம், பதட்டமாக உணருதல், அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள், கவனம் செலுத்துவதில் சிரமம், ஏதோ மோசமானது நடக்கப் போவது போல் உணருதல், தூங்குவதில் சிரமம், எளிதில் எரிச்சல் அல்லது கோபம், பயம் காரணமாக சூழ்நிலைகள் அல்லது பிறரை தவிர்ப்பது.

இந்த அமைப்பு செயல்படும்போது, மூளை மன அழுத்த ஹார்மோன்களை – முக்கியமாக அட்ரினலின் மற்றும் கார்டிசோலை – ரத்த ஓட்டத்தில் வெளியிட சிக்னல்களை அனுப்புகிறது. இந்த ரசாயனங்கள் உடலை விரைவாக பதிலளிக்க தயார்படுத்துகின்றன. அப்போது, தசைகளுக்கு அதிக ரத்தத்தை பம்ப் செய்ய இதயம் வேகமாகவும் வலுவாகவும் துடிக்கிறது. அதிக ஆக்ஸிஜனை வழங்க வேகமான சுவாசம் ஏற்படுகிறது, தசைகள் இறுக்கமடைந்து செயல்படத் தயாராகின்றன, உயிர்வாழ்வதில் ஆற்றல் கவனம் செலுத்துவதால் செரிமான அமைப்பு மெதுவாகிறது. உங்கள் உடல் எதிர்வினையாற்றும்போது உங்களுக்கு வியர்க்கலாம் அல்லது உடலில் நடுக்கம் ஏற்படலாம்.

 நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 பதட்டம் உடலின் எதிர்வினை அமைப்பைத் தூண்டுவதால், உடலில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்குகிறது. எனவே, மனதை அமைதிப்படுத்துவதற்கான சில எளிய மற்றும் பயனுள்ள வழிகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன: மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பதை புரிந்துகொள்ளுங்கள் – அதனால்தான் ஏதாவது காரணத்திற்காக மனதில் பயம் தோன்றினால், உடனடியாக உடல் பதட்டமாகிறது அல்லது நடுங்குகிறது. எனவே, உங்கள் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள் – உணர்ச்சிகளை அடக்குவது காலப்போக்கில் அறிகுறிகளை மோசமாக்கும்.

ஆழமாகவும், மெதுவாகவும் சுவாசித்தல்: 

பதட்டமாக இருக்கும்போது, சுவாசம் பெரும்பாலும் வேகமாகவும், ஆழமற்றதாகவும் மாறும். இந்நேரத்தில், உங்கள் மூக்கின் வழியாக 4 விநாடிகள் மூச்சை உள்ளிழுத்து, 2 விநாடிகள் பிடித்து, 6 விநாடிகள் வாய் வழியாக சுவாசிக்கவும் – மெதுவான, ஆழமான சுவாசத்தை எடுக்க முயற்சிக்கவும். இது உங்கள் மூளைக்கு பாதுகாப்பானது என்று சிக்னல் செய்கிறது, இது உங்கள் இதயத் துடிப்பைக் குறைக்கவும், உங்கள் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது.

 வழக்கமான உடல் பயிற்சி / யோகா: 

உடற்பயிற்சி அதிகப்படியான அட்ரினலினை எரிக்க உதவுகிறது மற்றும் எண்டோர்பின்கள் எனப்படும் உணர்வு- நல்ல ரசாயனங்களை வெளியிடுகிறது. தினமும் 20 நிமிட நடைப்பயிற்சி கூட பதட்ட அறிகுறிகளைக் குறைக்கும். மன உறுதி மற்றும் அடிப்படை: தற்போதைய தருணத்தில் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். உங்களைச் சுற்றி நீங்கள் பார்ப்பது, கேட்பது, உணருவது மற்றும் சுவைப்பது ஆகியவற்றைக் கவனியுங்கள். இது உங்கள் மூளையை கவலையிலிருந்து விலக்கி, “ஆபத்து” சிக்னல்களை குறைக்க உதவுகிறது.

“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!