இங்கிலாந்தில் நண்டுகளை வேக வைக்க தடை விதிப்பு
#Cooking
#Crab
#England
#Banned
Prasu
2 hours ago
இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய விலங்கு நல உத்தியின் ஒரு பகுதியாக, உயிருள்ள நண்டுகளை வேகவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெகாபாட் ஓட்டுமீன்கள் மற்றும் செபலோபாட் மொல்லஸ்க்குகளை வலி மற்றும் துன்பத்தை அனுபவிக்கும் திறன் கொண்ட உணர்வுள்ள உயிரினங்களாக அங்கீகரித்துள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் குறித்த நடவடிக்கையை பல விலங்குநல ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
சுற்றுச்சூழல் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் இந்த உத்தியை ஒரு தலைமுறையில் மிகவும் லட்சியமானது என்று விவரித்துள்ளார்.
(வீடியோ இங்கே )