தையிட்டி விவகாரம் - கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை!
யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இன்று காலை கடும் பதற்றமான சூழல் நிலவியது.
போராட்டத்தின் போது சிவில் சமூகச் செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட மொத்தம் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா 100,000 ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தின்போது, அங்கு நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பொலிஸாரால் கீழே தள்ளி விழத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும் , விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
