அசாமில் ரயில் மோதி 8 யானைகள் மரணம்
#Death
#Accident
#Elephant
#Train
Prasu
4 hours ago
அசாம் மாநிலம் ஹொஜாய் மாவட்டத்தில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், யானைகள் கூட்டத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 8 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், ஒரு யானை பலத்த காயமடைந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மோதலின் தாக்கத்தால் ரயிலின் இயந்திரம் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. எனினும், ரயிலில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
(வீடியோ இங்கே )